‘கே.ஜி.எஃப் 2’வின் ரிலீஸ் தேதியை அறிவித்த யாஷ்… போட்றா வெடிய!

  • January 29, 2021 / 10:39 PM IST

‘கே.ஜி.எஃப்’ படத்தின் பார்ட் 2-வை இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கி கொண்டிருக்கிறார். இந்த படத்தில் கதையின் நாயகனாக யாஷ் நடித்துள்ளாராம். மேலும், முக்கிய ரோல்களில் ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளார்களாம். ‘அதீரா’ என்ற பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் சஞ்சய் தத் நடித்துள்ளார். இதன் முதல் பாகம் சூப்பர் ஹிட்டானதால், ரசிகர்களுக்கு பார்ட் 2 மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வந்தது. கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி தான் படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த ஜனவரி 8-ஆம் தேதி ஹீரோ யாஷின் பர்த்டே ஸ்பெஷலாக ஃபர்ஸ்ட் லுக் டீசரை ரிலீஸ் செய்தனர். இந்த ஃபர்ஸ்ட் லுக் டீசர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது.

யாஷின் ரசிகர்கள் பல மாதங்களாக இப்படத்தின் ரிலீஸுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், இன்று (ஜனவரி 29-ஆம் தேதி) இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் நடிகர் யாஷ். இப்படத்தை இந்த ஆண்டு (2021) ஜூலை மாதம் 16-ஆம் தேதி திரையரங்குகளில் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் நடிகர் யாஷின் ரசிகர்கள் ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.