யாஷின் பர்த்டே ஸ்பெஷல்… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ‘கே.ஜி.எஃப் 2’ டீசர்!

  • January 8, 2021 / 04:28 PM IST

‘கே.ஜி.எஃப்’ படத்தின் பார்ட் 2-வை இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கி கொண்டிருக்கிறார். இந்த படத்தில் கதையின் நாயகனாக யாஷ் நடிக்கிறாராம். மேலும், முக்கிய ரோல்களில் ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

‘அதீரா’ என்ற பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் சஞ்சய் தத் நடிக்கிறார். இதன் முதல் பாகம் சூப்பர் ஹிட்டானதால், ரசிகர்களுக்கு பார்ட் 2 மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவல் உச்சத்தில் இருக்கிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வந்தது. கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி தான் படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

yash's kgf 2 teaser

இந்நிலையில், இன்று (ஜனவரி 8-ஆம் தேதி) ஹீரோ யாஷின் பர்த்டே ஸ்பெஷலாக ஃபர்ஸ்ட் லுக் டீசரை இந்த படத்தின் இயக்குநர் பிரஷாந்த் நீல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த ஃபர்ஸ்ட் லுக் டீசர் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. படத்தை கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

1

2

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus