இப்போதெல்லாம் ‘காமெடி’ என்று சொன்னாலே யோகி பாபுவின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வருகிறது. அந்த அளவுக்கு அவரின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. நமது வாழ்க்கையிலும், படங்களில் யோகி பாபு பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம்.
டைமிங் காமெடி மற்றும் டயலாக் மாடுலேஷன் தான் யோகி பாபுவின் ஸ்பெஷல். இப்போது யோகி பாபு நடிப்பில் ‘அயலான், சலூன், பொம்மை நாயகி, லவ் டுடே, காபி வித் காதல், காசேதான் கடவுளடா, வாரிசு, ஜெயிலர்’ என பல படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
2020-ஆம் ஆண்டு மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் செய்து கொண்டார் யோகி பாபு. இவர்களுக்கு 2020 டிசம்பர் மாதம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. தற்போது, யோகி பாபு – மஞ்சு பார்கவி தம்பதியினருக்கு நேற்று முன் தினம் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.