உருவாகவுள்ள யோகிபாபு திரைப்படத்தின் சீக்குவல்!

  • September 22, 2020 / 06:30 PM IST

ராக்லைன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் முத்துக்குமரன் இயக்கத்தில் யோகிபாபு நடித்து சென்ற வருடம் வெளியான திரைப்படம் “தர்ம பிரபு”.

யோகிபாபுவுடன் மொட்டை ராஜேந்திரன், ராதாரவி, ஜனனி ஐயர், ரேகா, ரமேஷ் திலக் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை இந்த படம் பெற்றது.

எமலோகத்தில் நடக்கும் அரசியல் குறித்த காட்சிகளை நகைச்சுவையாக இந்த படம் எடுத்துக்கூறி மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. தற்போது இந்த படம் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் OTT வழியாகவும், சாட்டிலைட் வழியாகவும் மக்களை சென்றடைய போவதாக தகவல் வந்துள்ளது.

அதுமட்டுமின்றி இந்த படத்தின் சீக்குவல் கதையை தர்ம பிரபு2 இந்த படத்தின் இயக்குனர் முத்துக்குமரன் எழுதி வருகிறாராம். இந்தக்கதையின் ஸ்கிரிப்ட் முடிந்தவுடன் இதுகுறித்து யோகிபாபுவுடன் பேசி படப்பிடிப்பை தொடங்க உள்ளார்களாம்.

தற்போது முத்துக்குமரன் இயக்கத்தில் விமல் மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவான “கன்னி ராசி” படத்தில் உள்ள பைனான்சியல் பிரச்சினைகளை தீர்த்து அந்த படத்தை வெளியிட முயற்சித்து வருகிறாராம் இந்த இயக்குனர். விரைவில் யோகிபாபு நடித்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது தற்போது வைரலாக பரவி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus