“இந்த படத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” – யோகிபாபு அறிக்கை

  • August 13, 2020 / 07:53 PM IST

தமிழ் திரைப் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிப்பது மூலம் அறிமுகமாகி பின்பு புகழ்பெற்ற காமெடி நடிகராக தற்போது வலம் வருபவர் நடிகர் யோகிபாபு.

2016 ஆம் வருடம் வெளியான “ஆண்டவன் கட்டளை” படத்தில் நடித்தது மூலம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற யோகிபாபு, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான “கோலமாவு கோகிலா” மற்றும் “பரியேறும் பெருமாள்” படங்களின் மூலம் தனக்கென தனி இடத்தை பிடித்தார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஹீரோவாக நடித்த “காக்டைல்” திரைப்படம் கடைசியாக ஜீ5 எனும் ஓடிடி தளத்தில் வெளியானது.

இவர் நடித்துள்ளா டிக்கிலோனா, ஜெகஜாலக்கில்லாடி, பிஸ்தா ஆகிய திரைப்படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு காத்திருக்கிறது. இவர் நடிக்கவுள்ள சைத்தான் கா பச்சா, சதுரங்க வேட்டை2, அடங்காதே திரைப்படங்கள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், நின்று கொள்வான், பன்னிக்குட்டி, மண்டேலா, வெள்ளை யானை, கடைசி விவசாயி, கன்னி ராசி, ட்ரிப் ஆகிய திரைப்படங்களின் வேலைகள் நடந்து கொண்டு வருகிறது.

இந்நிலையில் யோகிபாபுவின் மார்க்கெட் உச்சத்தில் இருப்பதால் இவர் சிறு வேடத்தில் நடித்திருந்தால் கூட அந்த படத்தின் போஸ்டரில் அவரது புகைப்படத்தை வைத்து தற்போது விளம்பரம் செய்து வருகிறார்கள். தற்போது யோகிபாபு நடிக்காத ஒரு படத்தில் அவருடைய புகைப்படத்தை வைத்து விளம்பரம் செய்துள்ளதை யோகிபாபு சமூக வலைத்தளத்தில் மறுத்து பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து யோகிபாபு குறிப்பிட்டுள்ளதாவது “இன்று இந்த விளம்பரம் பார்த்தேன். எனக்கும் “தௌலத்” படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்”என்றிருக்கிறார்.

https://twitter.com/iYogiBabu/status/1293455204671578113?s=19

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus