யோகி பாபு நடித்து அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “காக்டைல்”. கடந்த மார்ச் மாதம் வெளியாகவிருந்த இந்த திரைப்படம் கொரோனா பாதிப்பு காரணத்தால் தள்ளிவைக்கப்பட்டது.
இந்தத் திரைப்படம் OTT யில் வெளிவரும் என்று தற்போது செய்தி வெளியாகியுள்ளது. கொரோனா லாக்டவுன் காரணமாக சினிமாவில் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் திரையரங்கங்கள் மூடப்பட்டதால் ரிலீஸ் செய்யப்பட வேண்டிய படங்கள் நிலுவையில் உள்ளது.
அதனால் OTT தளங்களுக்கு திரைப்படங்கள் படையெடுக்கின்றன. ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் ஆகியோரின் படங்கள் வரிசையாக OTTயில் வெளிவந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
இந்த வரிசையில் யோகிபாபு நடித்து வெளிவரவுள்ள படம் “காக்டைல்” தற்போது ஜி5 எனும் OTT தளத்தில் ஜுலை10 ஆம் தேதி வெளியாகும் என்று திரைப்படக்குழு தெரிவித்துள்ளது.
இந்தப் படத்தை ஆர்.ஏ.விஜய முருகன் இயக்கியுள்ளார். சாய் பாஸ்கர் இசையில் இந்த படத்தில் சாயாஜி ஷிண்டே, மைம் கோபி, சுவாமிநாதன் ஆகியோர் நடித்துள்ளனர்.இந்தப்படத்தில் ‘காக்டைல்’ என்ற பறவை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.
லாக்டவுன் காரணத்தால் வரிசையாக படங்கள் OTT யில் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த படத்தை பிஜி முத்தையா தயாரித்துள்ளார்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.