நடுராத்திரியில் போன் செய்த நெல்சன் !

  • December 19, 2022 / 09:09 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் யோகி பாபு . நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் வாரிசு , ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார் . இது தவிர தலைநகரம் 2 , சூரப்புலி , வெள்ளை உள்ளம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார் .

யோகி பாபு நயன்தாராவுடன் நடித்த கோலமாவு கோகிலா படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது . இந்நிலையில் யோகி பாபு நிகழ்ச்சி ஒன்றில் கோலமாவு கோகிலா படத்தின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். இசையமைப்பாளர் அனிருத் ஸ்டுடியோவில் இருந்து நெல்சன் நடுராத்திரி 2 மணிக்கு யோகிபாபுவிற்கு தொலைபேசியில் அழைத்து உங்கள் வாட்ஸப்பில் பாட்டு அனுப்பி உள்ளேன் பாருங்கள்
என்று கூறியுள்ளார் .

இதுதான் நீங்களும் நயன் தாராவும் ஆடப்போகும் பாடல் என்று கூறியுள்ளார் டான்ஸ் எல்லாம் பெருசா இருக்காது என்றும் லவ் யூ மட்டும் சைகையில் காட்டுங்கள் போதும் என்று நெல்சன் தெரிவித்துள்ளார் . என்னிடம் கேட்டிங்க நயன்தாராவிடம் கேட்டிங்காளா என்று கேட்டுள்ளார் யோகி பாபு .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus