முருகன் கோவிலில் தரிசனம் செய்த யோகி பாபு

  • November 16, 2022 / 03:13 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் யோகி பாபு . அடுத்த வெளியாக உள்ள வாரிசு , ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார் . இது தவிர தலைநகரம் 2 , சூரப்புலி , வெள்ளை உள்ளம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார் . நடிகர் யோகி பாபு மிகுந்த கடவுள் முருகன் பக்தர் .

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் பகுதியில் உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முத்துமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் விசேஷ பூஜைகள் தினமும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திரைப்பட நடிகர் யோகி பாபு மற்றும் நகைச்சுவை நடிகர் கணேஷ் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். மேலும் அவர்கள் 146 அடி உயர சாமிக்கு மலர் அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபட்டனர். முன்னதாக கோவில் நிர்வாகிகள் சார்பில் நடிகர் யோகி பாபுவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. முருகனை யோகி பாபு வழிபடும்போது கோவிலில் எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus