வைரலாகும் யோகிபாபுவின் பிறந்தநாள் வீடியோ!

  • July 22, 2020 / 01:48 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் யோகிபாபு. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ள யோகிபாபு இன்று தனது 35 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

தற்போது அவரது நகைச்சுவையான பிறந்த நாள் கொண்டாட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தனது நண்பர்களுடன் பிறந்தநாள் கேக் வெட்டுவது போன்ற காட்சிகள் உள்ள இந்த வீடியோவில், யோகிபாபு தனது நண்பர் ஒருவரின் முகத்தில் கேக் பூசுகிறார்.

அதுமட்டுமின்றி சமீபத்தில்தான் யோகிபாபு மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். எனவே திருமணமான பின் தன் முதல் பிறந்தநாளை தனது மனைவியுடன் யோகிபாபு தற்போது கொண்டாடுகிறார்.

2009 ஆம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் தன் நடிப்பு பயணத்தை ஆரம்பித்த யோகிபாபு தற்போது பிரபலமான காமெடி நடிகராக வலம் வருகிறார்.

தற்போது பல படங்களில் நடித்து வரும் யோகிபாபு, 2020இல் தன் கைவசத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களை வைத்துள்ளார்.

இவரது தன்னடக்கம் மற்றும் சிறந்த நடிப்புத் திறமை இவரை குறைந்த காலத்திலேயே பெரிய உயரத்தை எட்ட உதவியுள்ளது. இந்த சிறந்த நடிகர் இன்று தனது பிறந்தநாளை நண்பர்களுடன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus