நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகப்போகும் யோகி பாபுவின் ‘மண்டேலா’… ரிலீஸானது சூப்பரான ட்ரெய்லர்!

  • March 25, 2021 / 07:31 PM IST

சினிமாவில் டாப் காமெடியன்களில் ஒருவராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் ‘மண்டேலா’. இந்த படத்தை இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்க, மிக முக்கிய ரோல்களில் சங்கிலி முருகன், ஜி.எம்.சுந்தர், ஷீலா ராஜ்குமார், கண்ணா ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

நடிகர் யோகி பாபுவின் ரசிகர்கள் பல மாதங்களாக இப்படத்தின் டீசருக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள். சமீபத்தில் தான் ஃபர்ஸ்ட் லுக் டீசரை படக்குழுவினர் ரிலீஸ் செய்தனர். இதனால் யோகி பாபுவின் ரசிகர்கள் ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட் ஆனார்கள்.

இந்நிலையில், இன்று (மார்ச் 25-ஆம் தேதி) படத்தின் ட்ரெய்லரை டாப் இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்துள்ளார். இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது. படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்யாமல், நேரடியாக விஜய் டிவியில் வருகிற ஏப்ரல் 4-ஆம் தேதி காலை 9:30 மணிக்கு ஒளிபரப்ப ப்ளான் போட்டுள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus