யோகி பாபுவின் ‘மண்டேலா’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சினிமாவில் டாப் காமெடியன்களில் ஒருவராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் ஹீரோவாக நடித்துள்ள புதிய படமான ‘மண்டேலா’வுக்கு இவரது ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள். இப்படம் திரையரங்குகளில் ரிலீஸாகாமல், நேரடியாக விஜய் டிவியில் நேற்று (ஏப்ரல் 4-ஆம் தேதி )காலை 9:30 மணிக்கு ஒளிபரப்பானது.

இன்று (ஏப்ரல் 5-ஆம் தேதி) இந்த படம் பிரபல OTT தளமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’யிலும் ரிலீஸாகியுள்ளது. இதனால் யோகி பாபுவின் ரசிகர்கள் ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளனர். இந்த படத்தை இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கியுள்ளார், மிக முக்கிய ரோல்களில் சங்கிலி முருகன், ஜி.எம்.சுந்தர், ஷீலா ராஜ்குமார், கண்ணா ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார், பிலோமின் ராஜ் படத்தொகுப்பாளராகவும், விது அய்யன்னா ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியிருக்கிறார்கள். இப்போது, இந்த படத்தை விஜய் டிவியிலும், ‘நெட்ஃப்ளிக்ஸ்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மிலும் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

1

2

Share.