தமிழ் திரைப் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிப்பது மூலம் அறிமுகமாகி பின்பு புகழ்பெற்ற காமெடி நடிகராக தற்போது வலம் வருபவர் நடிகர் யோகிபாபு.
2016 ஆம் வருடம் வெளியான “ஆண்டவன் கட்டளை” படத்தில் நடித்தது மூலம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற யோகிபாபு, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான “கோலமாவு கோகிலா” மற்றும் “பரியேறும் பெருமாள்” படங்களின் மூலம் தனக்கென தனி இடத்தை பிடித்தார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஹீரோவாக நடித்த “காக்டைல்” திரைப்படம் கடைசியாக ஜீ5 எனும் ஓடிடி தளத்தில் வெளியானது.
தற்போது தமிழில் மிகவும் பிஸியாக இருக்கும் நடிகர்களில் ஒருவரான யோகிபாபு நடிகை அஞ்சலியுடன் இணைந்து நடித்துள்ள “பூச்சாண்டி” என்ற திரைப்படத்தின் போஸ்டர் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Makkale, Peigal Munnetra Kazhagam is open for admissions😁 T&C apply.