தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘வாரிசு’-வை வம்சி இயக்கியிருந்தார். இந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி இப்படம் ரிலீஸானது.
‘வாரிசு’-வை தொடர்ந்து விஜய்-யின் 67-வது படமான ‘லியோ’வை ‘மாஸ்டர்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தை ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ லலித் குமார் தயாரிக்கிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
‘லியோ’வை தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான அட்லி இயக்கவிருக்கிறார். ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் இந்த படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இந்நிலையில், காஞ்சிபுரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீட்டு வாசலுக்கு தனது குடும்பத்தினருடன் சென்று “விஜய்யை எப்படியாவது நேரில் பார்த்து அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டும்” என்று அழுது பேசிய வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.