கோலிவுட்டில் ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்துக்கு பிறகு நடிகர் ‘யங் சூப்பர் ஸ்டார்’ சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தில் ஹீரோயினாக கல்யாணி ப்ரியதர்ஷனும், வில்லன் ரோலில் எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர்.
பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் ஜானர் படமான இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த ஆண்டு (2020) பிப்ரவரி 19-ஆம் தேதி துவங்கப்பட்ட இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வந்தது. பின், ‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது.
தற்போது, நடிகர் சிம்புவின் ரசிகர்களுக்காக ஒரு ஹேப்பி நியூஸ் வெளியாகியுள்ளது. இந்த லாக் டவுன் டைமில் சிம்பு ஒரு ஸ்க்ரிப்ட் எழுதிக் கொண்டிருக்கிறாராம். ‘மாநாடு’ முடிந்த பிறகு இப்போது எழுதும் ஸ்க்ரிப்ட்டை அவரே இயக்கி, நடிக்கத் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே, 2006-ஆம் ஆண்டு வெளியான ‘வல்லவன்’ என்ற படத்தை சிம்புவே இயக்கி, நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.