ரம்ஜான் ஸ்பெஷல்… யுவன் ஷங்கர் ராஜா – ஏ.ஆர்.அமீன் இணைந்து பாடிய பாடல்!
May 14, 2021 / 03:43 PM IST
|Follow Us
சினிமாவில் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் யுவன் ஷங்கர் ராஜா. இவர் இசையமைப்பாளராக அறிமுகமான முதல் படத்தின் பாடல்களே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘அரவிந்தன்’. அதன் பிறகு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்தார். யுவன் ஷங்கர் ராஜா தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழி படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். கடைசியாக இவர் இசையமைத்து திரையரங்குகளில் ரிலீஸான படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’.
இப்போது தமிழில் சந்தானத்தின் ‘டிக்கிலோனா’, ‘பிக் பாஸ் 4’ ரியோ ராஜின் ‘பிளான் பண்ணி பண்ணனும்’, ‘தல’ அஜித்தின் ‘வலிமை’, சிலம்பரசனின் ‘மாநாடு’, தனுஷின் ‘நானே வருவேன்’, அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’, ஹரிஷ் கல்யாணின் ‘ஸ்டார்’ ஆகிய படங்களுக்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், இன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையில் ‘தலா அல் பத்ரு அலைனா’ என்ற பாடல் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த பாடலை யுவன் ஷங்கர் ராஜா – ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
A Sweet Eid Surprise from ‘U1 RECORDS’,
Presenting ‘Tala’a Al-Badru ‘Alayna‘ https://t.co/quWHaCQtcI
The Little Maestro @thisisysr & The Little Mozart @arrameen coming together for the first time, for a blessed Song that has its roots etched in the history of Islam.#EidMubarak
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.