முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து கடந்த ஆண்டு (2019) வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம்.
ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி தான் இந்த படத்தில் ஹீரோயினாம். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வந்தது. பின், ‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது. சமீபத்தில், 75 நபர்களை மட்டும் வைத்து சில நிபந்தனைகளுடன் ஷூட்டிங் எடுக்க அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது.
விரைவில் ‘வலிமை’யின் புதிய ஷெடியூல் ஷூட்டிங் ஆரம்பமாகவுள்ளது. கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி இயக்குநர் ஹெச்.வினோத் தனது பிறந்த நாளை கொண்டாடினார். இவருக்கு ‘வலிமை’ படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ட்விட்டரில் வாழ்த்து கூறியிருந்தார். அதற்கு ரசிகர் ஒருவர் “தலைவா அப்டேட் எதாச்சு கேட்டு வாங்கி தாங்க” என்று கேட்டிருந்தார். இந்த ட்வீட்டிற்கு “வெகு விரைவில் அப்டேட் வரும்” என பதில் கூறியுள்ளார் யுவன் ஷங்கர் ராஜா.
https://twitter.com/thisisysr/status/1302534453823025153
https://twitter.com/kadavul25/status/1302534588909060096
It'll come soon….
— Raja yuvan (@thisisysr) September 6, 2020