விஜய் சேதுபதியின் ‘ஃபார்ஸி’ வெப் சீரிஸுக்காக ஜாகிர் ஹுசைன் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

  • February 23, 2023 / 12:53 AM IST

சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் சாதித்து மாஸ் காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரது ரசிகர்கள் ‘மக்கள் செல்வன்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். இப்போது, ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் பல படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், விஜய் சேதுபதி பிரபல ஹிந்தி நடிகர் ஷாஹித் கபூருடன் இணைந்து நடித்த ‘ஃபார்ஸி’ என்ற வெப் சீரிஸ் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’ல் ரிலீஸானது.

இவ்வெப் சீரிஸை இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கியுள்ளனர். இதில் மிக முக்கிய ரோல்களில் கே கே மேனன், ராஷி கண்ணா, புவன் அரோரா, ஜாகிர் ஹுசைன், ரெஜினா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இவ்வெப் சீரிஸுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது, நடிகர் ஜாகிர் ஹுசைன் இந்த சீரிஸில் நடிப்பதற்காக ரூ.50 லட்சம் சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus