விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 6 கடந்த ஆண்டு (2022) அக்டோபர் 9-ஆம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு இந்த ஆண்டு (2023) ஜனவரி 22-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது.
105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல், ஷிவின் கணேசன், அஸீம், ராபர்ட், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டா ராஜேஷ், ரச்சிதா மகாலக்ஷ்மி, ராம் ராமசாமி, ADK, ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி, கதிரவன், குயின்ஸி, நிவாஷினி, தனலக்ஷ்மி, மைனா நந்தினி ஆகிய 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த சீசனில் அஸீம் டைட்டில் வின்னர் என்றும், விக்ரமன் ரன்னர் அப் என்றும் அறிவிக்கப்பட்டது. சமீபத்தில், ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 7-க்கான பணிகள் துவங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி வருகிற அக்டோபர் 1-ஆம் தேதியிலிருந்து ஒளிபரப்பாகத் துவங்கவுள்ளது.
இந்த சீசன் 7-ல் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். தற்போது, இந்நிகழ்ச்சியில் ‘ஜீ தமிழ்’ல் வந்த ‘சத்யா’ சீரியல் புகழ் விஷ்ணு கலந்து கொள்ளவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.