78-வது கோல்டன் குளோப் விருது விழாவில் திரையிட தேர்வான 2 தமிழ் படங்கள்!
December 21, 2020 / 01:22 PM IST
|Follow Us
2021 மார்ச் மாதம் 1-ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 78-வது கோல்டன் குளோப் விருது விழா நடைபெற பிளான் போடப்பட்டுள்ளது. இந்த விழாவில் சிறந்த அயல் நாட்டு திரைப்படம் என்ற பிரிவில் வருகிற ஜனவரி மாதம் திரையிட பல படங்கள் தேர்வாகியுள்ளது. இதன் லிஸ்ட் இப்போது வெளியாகியுள்ளது.
இந்த லிஸ்டில் இரண்டு தமிழ் திரைப்படங்களும் தேர்வாகியிருப்பது தமிழ் சினிமா பிரபலங்களையும், ரசிகர்களையும் ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட் செய்துள்ளது. ‘அசுரன்’ மற்றும் ‘சூரரைப் போற்று’ ஆகிய இரண்டு படங்கள் தான் தேர்வாகியிருக்கிறது. நடிகர் தனுஷ் – இயக்குநர் வெற்றிமாறன் காம்போவில் வெளியான ‘அசுரன்’, ‘வெக்கை’ நாவலை மையமாக வைத்து உருவான படம்.
நடிகர் சூர்யா – பெண் இயக்குநர் சுதா கொங்கரா காம்போவில் வெளியான ‘சூரரைப் போற்று’, ‘ஏர் டெக்கான்’ விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான படம். இவ்விரண்டு படங்களில் ‘அசுரன்’ கடந்த ஆண்டு (2019) திரையரங்குகளிலும், ‘சூரரைப் போற்று’ இந்த ஆண்டு (2020) OTT-யிலும் வெளியாகி ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.