இன்றைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் படங்கள் 100 நாட்கள் திரையரங்குகளில் ஓடுவது அரிதான ஒன்றாக உள்ளது . ஆனால் சமீபத்தில் வெளிவந்த சில படங்கள் 100 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடி சாதனை செய்து உள்ளது .
திருச்சிற்றம்பலம்: மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் திருச்சிற்றம்பலம். முக்கியமாக பாத்திரத்தில் பாரதி ராஜா நடித்து இருந்தார் . பிரகாஷ்ராஜ் , நித்யா மேனன் ஆகியோரின் கதாபாத்திரமும் நல்ல வரவேற்பை பெற்றது . இந்த படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது .
லவ் டுடே: கோமாளி படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் லவ் டுடே. யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . பிரதீப் ரங்கநாதனின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது . வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது .
விக்ரம்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான படம் விக்ரம் . விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் முக்கியமான பாத்திரத்தில் நடித்து இருந்தனர் . மேலும் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார் . சூர்யா நடித்த ரோலெக்ஸ் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus