நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியான படம் பீஸ்ட் . இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது . டாக்டர் மற்றும் கோலாவு கோகிலா ஆகிய படங்களை வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் நடிகர் விஜய்யுடன் இணைவதால் இந்த படத்திற்கு மிக பெரிய எதிர்பார்ப்பு இருந்தது . மேலும் பீஸ்ட் படத்திலிருந்து வெளியான முதல் இரண்டு பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்று எதிர்பார்ப்பை பெற்றது . ஆனால் பீஸ்ட் படம் வெளியான பிறகு கலவையான விமர்சனங்களை பெற தொடங்கியது.
இந்நிலையில் பீஸ்ட் படம் வெளியான பின் அடுத்து நாள் யஷ் நடித்த கே ஜி எஃப் 2 படம் வெளியானது . மிகவும் குறைவான திரையரங்கில் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது . இது வரையில் எந்த ஒரு படத்திற்கும் இல்லாத அளவிற்கு இந்த படத்திற்கு வரவேற்பை தமிழ் ரசிகர்கள் கொடுத்து வருகிறார்கள் . இதனால் அலுவலக நாட்களில் கூட சிறப்பு காட்சிகளை திரையரங்குகளில் ஏற்பாடு செய்து உள்ளனர் . பெரும்பாலும் அனைத்து காட்சிகளும் அரங்கு நிறைந்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் வெளியான ஒரு வாரத்திற்கு பிறகு திரையரங்கில் இருந்து எடுத்துவிட்டு கே ஜி எஃப் 2 படத்தை திரையிட்டு வருகிறார்கள் . இதனால் தமிழகத்தில் அண்ணாத்த , வலிமை , எதற்கும் துணிந்தவன், பீஸ்ட் என அனைத்து தமிழ் படத்தின் வசூல்களையும் தாண்டி யஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கே ஜி எஃப் 2 வசூல் செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது.