7 கெட்டப்புகளில் அசத்தப்போகும் விக்ரம்… ‘கோப்ரா’ எப்போது ரிலீஸ் தெரியுமா?
May 12, 2022 / 01:00 PM IST
|Follow Us
சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் விக்ரம் தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார். இப்போது விக்ரம் நடிப்பில் ‘கோப்ரா, துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன்’ மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் விக்ரமின் நடிப்புக்கு சரியான தீனி போடும் வகையில் அமைந்துள்ள படம் ‘கோப்ரா’. இந்த படத்தை ‘டிமான்ட்டி காலனி’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்க, ஹீரோயினாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோலில் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்துள்ளாராம்.
இந்த படத்துக்கு இன்னொரு ஹைலைட்டாக அமைந்திருப்பது ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மானின் இசை. ஏற்கனவே, இசை புயலின் இசையில் ‘தும்பி துள்ளல், அதீரா’ ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இடம்பிடித்தது. சமீபத்தில், ரிலீஸான ஃபர்ஸ்ட் லுக் டீசர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. இதன் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தை வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.