தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் விஜயகாந்த் .இவரது இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் .சகாப்தம் என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமாகி இருந்தார் . நடிகர் விஜயகாந்த் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார் . ஆனால் இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற வில்லை . இந்த படத்தை தொடர்ந்து மதுர வீரன் என்கிற படத்தில் நடித்தார் சண்முக பாண்டியன் . இந்த படமும் இவருக்கு பெரிதாக வெற்றி பெறவில்லை . தற்பொழுது மித்ரன் என்கிற படத்தில் நடித்து வருகிறார் .
மித்ரன் படத்தை தொடர்ந்து நடிகர் சண்முக பாண்டியன் ஒரு வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது . இந்த வெப் சீரிஸை சசிகுமார் இயக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.மேலும் அது குற்றப்பரம்பரை நாவலின் கதையை தான் வெப் சீரிஸாக எடுக்க இருக்கிறார்கள் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது .ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இதனை தயாரிக்கிறார் . ஏற்கனவே இந்த குற்றப்பரம்பரை கதையை இயக்குனர் பாரதிராஜா மற்றும் இயக்குனர் பாலா இயக்க முயற்சித்தது குறிப்பிடத்தக்கது . இது தொடர்பாக ஏற்கனவே பாரதிராஜாக்கும் பாலாவுக்கு கருத்து மோதல் ஏற்பட்டது எனவே இருவருமே இந்த கதையை தற்பொழுது இயக்காமல் இருக்கிறார்கள் .