லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள படம் விக்ரம் .இந்த படத்தில் விஜய்சேதுபதி , ஃபகத் பாசில் , காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர் . இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் பா .ரஞ்சித் , நடிகர் சிலம்பரசன் , நடிகர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டனர். நடிகர் உதயநிதி ஸ்டாலின் விக்ரம் படத்தை நடிகர் கமலுடன் இணைந்து இந்த படத்தை வெளியிடுகிறார்.
இந்த விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின் நடிகர் கமல்ஹாசனை நான் மிரட்டி இந்த படத்தை நான் வாங்கியதாக சிலர் என்னை கேட்டார்கள் . நடிகர் கமல்ஹாசனை யாராலும் மிரட்ட முடியாது . அப்படி யாராவது மிரட்டினாலும் அவர் அதுக்கு அஞ்சுபவர் அல்ல என்று தெரிவித்தார் . நடிகர் கமல்ஹாசன் ஒரு வருடத்திற்கு ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உதயநிதி ஸ்டாலின் நடிகர் கமலிடம் வைத்தார் . மேலும் அனிருத் இசையையும் , இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களையும் பாராட்டி பேசினார் .
விழாவில் பேசியவுடன் விழாவில் இருந்து சென்று விட்டார் உதயநிதி . உதயநிதி நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் நெஞ்சுக்கு நீதி படத்தினை அவரது தந்தை ஸ்டாலின் பார்த்துக் கொண்டு இருக்கிறார் அதனால் உடனே சென்று விட்டார் என்று கமல் பேசும்போது கூறினார் .