தமிழ் சினிமாவில் “கனா ” என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அருண் ராஜா காமராஜ் .
இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்து இருந்தார் . சத்யராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் . சிவகார்த்திகேயன் இந்த படத்தை தயாரித்து இருந்தார் .இந்த படம் வசூல் ரீதியாகவும் , விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் அடுத்து இயக்கும் அடுத்து படத்தின் அறிவிப்பு வந்தது .
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் நெஞ்சுக்கு நீதி .இந்த படம் ஹிந்தி மொழியில் வெளியான ஆர்டிகல் 15 படத்தின் தமிழ் ரீமேக் .இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார் .ஆரி அர்ஜுனன் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர் .
சமீபத்தில் திரையரங்கில் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இந்நிலையில் தற்போது நடிகர் கமல்ஹாசன் நெஞ்சுக்கு நீதி படத்தை பார்த்து விட்டு அந்த படத்தின் படக்குழுவை அழைத்து பாராட்டி உள்ளார் . மேலும் இந்த சந்திப்பின் பொது நடிகர் உதயநிதி பெரியார் மற்றும் அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் சிலைகளை அன்பளிப்பாக அளித்துள்ளார் .