“ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது”… சரத்பாபுவின் மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்த கமல்!
May 24, 2023 / 10:25 AM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் சரத்பாபு. இவர் தமிழில் அறிமுகமான முதல் படம் ‘பட்டினப்பிரவேசம்’. இந்த படத்தை பிரபல இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கியிருந்தார்.
இந்த படத்துக்கு பிறகு சரத்பாபு ‘நிழல் நிஜமாகிறது, வட்டத்துக்குள் சதுரம், முள்ளும் மலரும், நினைத்தாலே இனிக்கும், உதிரிப்பூக்கள், நெஞ்சத்தைக்கிள்ளாதே, நெற்றிக்கண், பகல் நிலவு, வேலைக்காரன், அண்ணாமலை, டூயட், முத்து, லவ் பேர்ட்ஸ், ஆளவந்தான், பாபா, புதிய கீதை, ஒற்றன், அருள், கஜேந்திரா, பேரரசு’ போன்ற பல தமிழ் படங்களில் நடித்தார்.
இவர் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நடிகர் சரத்பாபு (வயது 71) இன்று இயற்கை எய்தினார்.
தற்போது, கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் “சிறந்த நடிகரும், அருமை நண்பருமான சரத்பாபு மறைந்துவிட்டார். அவருடன் இணைந்து நடித்த நாட்கள் என் மனதில் நிழலாடுகின்றன. தமிழில் என் குருநாதரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். காலத்தால் அழியாத பல பாத்திரங்களை ஏற்று சிறப்பு செய்தவர். ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது. அவருக்கு என் அஞ்சலி” என்று பதிவிட்டுள்ளார்.
சிறந்த நடிகரும், அருமை நண்பருமான சரத்பாபு மறைந்துவிட்டார். அவருடன் இணைந்து நடித்த நாட்கள் என் மனதில் நிழலாடுகின்றன. தமிழில் என் குருநாதரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். காலத்தால் அழியாத பல பாத்திரங்களை ஏற்று சிறப்பு செய்தவர். ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது.