போடா போடி படத்தை இயக்கி அதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் . இதை தொடர்ந்து நானும் ரவுடி தான் , தானா சேர்ந்த கூட்டம் , போன்ற படங்களை இயக்கி இருந்தார் . இவர் இயக்கத்தில் காத்து வாக்குல இரண்டு காதல் படம் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் நடிகர் அஜித் படத்தை இயக்க உள்ளார்.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கும் அஜித்தின் 62 வது படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்கு உள்ளது . விக்னேஷ் சிவன் – அஜித் கூட்டணியில் உருவாகும் படத்தில் நாயகியாக யார் நடிக்க உள்ளார் என்று கேள்வி ரசிகர்களிடையே எழுந்து உள்ளது .
இது ஒரு பக்கம் இருக்க தற்போது ஏ கே 62 படத்தில் வில்லனாக நடிக்க அரவிந்த்சாமி நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது . மேலும் அஜித் குமார் மற்றும் அரவிந்த் சாமி இருவருமே வில்லத்தனமாக நடிப்பதில் சிறந்தவர்கள் . இதனால் இருவரையும் இணைந்து ஒரே படத்தில் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர் .
இந்நிலையில் நடிகர் சந்தானம் இந்த படத்தில் நடிகர் அஜித்தின் நண்பர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது . விக்னேஷ் சிவன் சந்தானத்திடம் பேசி அவரை நடிக்க ஒப்புதல் வாங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது . நடிகர் சந்தானம் தொடர்ச்சியாக ஹீரோவாக மட்டுமே நடித்து வரும் நிலையில் அஜித்திற்காக நண்பர் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் என்று கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது .
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus