ஷாந்தனுவுக்கு பதிலாக நடித்த பரத்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?
January 17, 2023 / 09:26 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஷாந்தனு. பாப்புலர் இயக்குநர் கே.பாக்யராஜின் மகனான ஷாந்தனு குழந்தை நட்சத்திரமாக ‘வேட்டிய மடிச்சுக்கட்டு’ படத்தில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். அதன் பிறகு ஹீரோ அவதாரம் எடுத்தார் ஷாந்தனு.
‘சக்கரகட்டி, சித்து +2, கண்டேன், ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைப்பேசி, வாய்மை, கோடிட்ட இடங்களை நிரப்புக, முப்பரிமாணம், வானம் கொட்டட்டும், பாவக் கதைகள், மாஸ்டர், கசட தபற, முருங்கைகாய் சிப்ஸ்’ என தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார் ஷாந்தனு. 2015-யில் VJ கீர்த்தியை திருமணம் செய்து கொண்டார் ஷாந்தனு.
இப்போது, ஷாந்தனு நடிப்பில் ‘இராவண கோட்டம்’ என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான விக்ரம் சுகுமாரன் இயக்கி வருகிறார். இதில் ஹீரோயினாக ‘கயல்’ ஆனந்தி நடிக்கிறார். இந்நிலையில், ஷாந்தனு நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.
2004-யில் ரிலீஸான தமிழ் படம் ‘காதல்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பாலாஜி சக்திவேல் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக பரத் நடித்திருந்தார். ஆனால், இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டும் என இயக்குநர் பாலாஜி சக்திவேல் ஷாந்தனுவை அணுகியிருந்தாராம். பின், சில காரணங்களால் ஷாந்தனுவால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.