நடிகர் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் வாரிசு . தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு இந்த படத்தை தயாரித்து உள்ளார் . ராஷ்மிகா நாயகியாக நடித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். சரத்குமார் , பிரகாஷ் ராஜ் , ஷ்யாம் , உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளார் .
ஜனவரி மாதம் 11 -ஆம் தேதி தமிழில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றுது. தெலுங்கு சினிமா ரசிகர்களும் இந்த படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு தரவில்லை.
ஆனாலும் வாரிசு படத்தின் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து படம் 100 வசூல் செய்தது, 200 கோடி வசூல் செய்தது என்ற போஸ்டர்களை வெளியிட்டு வந்தனர். அந்த வகையில் சமீபத்தில் வாரிசு 300 கோடி வசூல் செய்து உள்ளது என்று போஸ்டர் வெளியீட்டது.
இதன் பிறகு போஸ்டர் வெளியான சில மணி நேரத்தில் பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளு சட்டை மாறன் ” 300 கோடி உலக மகா உருட்டு ” என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த ட்வீட் வைரலாகி வருகிறது.