தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இப்போது இவர் நடிப்பில் ‘ஜெயிலர், லால் சலாம்’ மற்றும் இயக்குநர் த.செ.ஞானவேல் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
ரஜினியின் 169-வது படமான ‘ஜெயிலர்’-ஐ பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்குகிறார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

‘லால் சலாம்’ படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்குகிறார். இதில் விஷ்ணு விஷால் – விக்ராந்த் இணைந்து நடிக்க, ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் வலம் வரவிருக்கிறாராம். இவ்விரண்டு படங்களின் ஷூட்டிங்கும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
தற்போது, நடிகர் ரஜினிகாந்த் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ்வை நேரில் சந்தித்து பேசியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை கபில் தேவ்வே தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்ததுடன், ரஜினியுடன் எடுத்த ஸ்டில்லையும் ஷேர் செய்துள்ளார். இந்த ஸ்டில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
