ரஜினியின் மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யாவுக்கு இரண்டாவது திருமணம்… மாப்பிள்ளை யார் தெரியுமா?
July 11, 2023 / 06:03 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா. டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா, தனுஷின் ‘3’, கெளதம் கார்த்திக்கின் ‘வை ராஜா வை’ போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். 2004-ஆம் ஆண்டு டாப் ஹீரோக்களில் ஒருவரான தனுஷை திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா.
தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். கடந்த ஆண்டு (2022) ஜனவரி மாதம் 17-ஆம் தேதி நடிகர் தனுஷும், இயக்குநர் ஐஸ்வர்யாவும் பிரியப்போவதாக அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் அறிவித்தனர்.
இச்செய்தி ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சமீபத்தில், ஐஸ்வர்யா இயக்கும் புதிய படமான ‘லால் சலாம்’-ன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது. இதில் விஷ்ணு விஷால் – விக்ராந்த் நடிக்க, ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் வலம் வரவிருக்கிறார்.
இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரபல இளம் நடிகர் ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது..
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus