ரஜினி – மஞ்சு வாரியர் ஜோடியாக நடிக்கும் ‘தலைவர் 170’… ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகப்போகுது தெரியுமா?
August 7, 2023 / 11:56 AM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இப்போது இவர் நடிப்பில் ‘ஜெயிலர், லால் சலாம்’ மற்றும் இயக்குநர் த.செ.ஞானவேல் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கவுள்ள ‘தலைவர் 170’ படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார். இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கவுள்ளார்.
ரஜினி போலீஸ் ரோலில் நடிக்கவிருக்கும் இந்த படத்துக்கு ‘வேட்டையன்’ என டைட்டில் வைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் ரஜினிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கவிருக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், நானி ஆகியோர் நடிக்கவிருக்கின்றனர்.
இதன் ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது, இந்த படத்தின் ஷூட்டிங் வருகிற செப்டம்பர் மாதத்தில் இருந்து ஆரம்பமாகவுள்ளதாகவும், இதற்காக ரஜினி 50 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus