நடிகை லக்ஷ்மி மேனனை திருமணம் செய்து கொள்ளப்போகிறாரா நடிகர் விஷால்?
August 11, 2023 / 12:05 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். பிரபல தயாரிப்பாளரின் மகனாக இருக்கும் விஷால், திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து ஹிட் படங்களில் நடித்து வருகிறார்.
விஷாலுக்கு முதல் படம் ‘செல்லமே’. அதன் பிறகு விஷாலுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை, சத்யம், தோரணை, தீராத விளையாட்டுப் பிள்ளை, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், பூஜை, கதகளி, துப்பறிவாளன், இரும்புத் திரை, அயோக்யா, எனிமி, வீரமே வாகை சூடும், லத்தி’ என படங்கள் குவிந்தது.
விஷாலின் படங்கள் அனைத்தும் தெலுங்கு மொழியிலும் ரிலீஸாவதால், ஆந்திரா மற்றும் தெலுங்கானா ரசிகர்களிடமும் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது விஷால் நடிப்பில் ‘துப்பறிவாளன் 2, மார்க் ஆண்டனி’ மற்றும் இயக்குநர் ஹரி படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இந்நிலையில், விஷால் பிரபல நடிகை லக்ஷ்மி மேனனை காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது. தற்போது, இது குறித்து விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் “பரவி வரும் இந்த தகவல் உண்மையல்ல. வதந்தியே” என்று கூறியுள்ளார். ‘பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன்’ ஆகிய இரண்டு படங்களில் விஷால் – லக்ஷ்மி மேனன் ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Usually I don’t respond to any fake news or rumors about me coz I feel it’s useless. But now since the rumour about my marriage with Laksmi Menon is doing the rounds, I point blankly deny this and it’s absolutely not true and baseless.