மீண்டும் ரஜினியுடன் கூட்டணி… ‘தலைவர் 172’ படத்தின் இயக்குநர் யார் தெரியுமா?
September 12, 2023 / 08:05 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இவர் நடிப்பில் ‘ஜெயிலர், லால் சலாம்’, இயக்குநர் த.செ.ஞானவேல் படம், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது.
இதில் ரஜினியின் 169-வது படமான ‘ஜெயிலர்’ கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்கியுள்ளார். இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
‘லால் சலாம்’ படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்குகிறார். இதில் விஷ்ணு விஷால் – விக்ராந்த் இணைந்து நடிக்க, ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் வலம் வரவிருக்கிறாராம். இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் ரஜினியின் 171-வது படத்தின் ஷூட்டிங்கை அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் ஆரம்பிக்கவுள்ளனர். இந்நிலையில், ‘தலைவர் 172’ படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை ‘ஜெயிலர்’ இயக்குநர் நெல்சன் இயக்கவுள்ளார். இதனை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம்.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus