• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Focus » செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகப்போகும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகப்போகும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

  • September 26, 2023 / 05:21 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகப்போகும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

சினிமாவில் மாஸ் காட்டி வரும் ஒவ்வொரு ஹீரோ, ஹீரோயினுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து ஹீரோஸ் & ஹீரோயின்ஸ் நடித்து வருகிறார்கள். இந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸாகப்போகும் படங்களின் லிஸ்ட் இதோ…

1.சந்திரமுகி 2 :

முன்னணி நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் கேரியரில் மிகப் பெரிய வெற்றி அடைந்த படங்களின் லிஸ்டில் கண்டிப்பாக ‘சந்திரமுகி’ படத்துக்கும் ஒரு இடம் உண்டு. 2005-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை பிரபல இயக்குநர் பி.வாசு இயக்கியிருந்தார். இதில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடித்திருந்தார்.

இந்த படத்தில் ‘சந்திரமுகி’ என்ற பவர்ஃபுல்லான டைட்டில் ரோலில் ஜோதிகா நடித்திருந்தார். ஹாரர் ஜானரில் வெளி வந்த இந்த படத்தின் பார்ட் 2-வையும் பி.வாசுவே இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் தீவிர ரசிகரும், பிரபல நடிகருமான ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். இதில் ஹீரோயினாக கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார். மேலும், முக்கிய ரோல்களில் ராதிகா சரத்குமார், வடிவேலு, லக்ஷ்மி மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். இதனை சுபாஸ்கரன் தனது ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரித்துள்ளார்.

எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ள இதற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தை வருகிற செப்டம்பர் 28-ஆம் தேதி தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

2.இறைவன் :

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ‘ஜெயம்’ ரவி. இவர் நடிப்பில் ‘இறைவன், சைரன், ஜீனி, தனி ஒருவன் 2’ மற்றும் இயக்குநர் எம்.ராஜேஷ் படம் என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘இறைவன்’ படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஐ.அஹமத் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ‘ஜெயம்’ ரவிக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடித்துள்ளார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் ராகுல் போஸ், ஆசிஷ் வித்யார்த்தி, நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இதற்கு ஹரி.கே.வேதாந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜே.வி.மணிகண்டா பாலாஜி படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. சைக்கோ த்ரில்லர் படமான இதனை வருகிற செப்டம்பர் 28-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

3.சித்தா :

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சித்தார்த். இவர் நடிப்பில் ‘இந்தியன் 2, சித்தா, டெஸ்ட்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘சித்தா’ படத்தை பிரபல இயக்குநர் SU.அருண் குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நிமிஷா சஜயன் நடித்துள்ளார். இதனை சித்தார்த்தே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ETAKI எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் பாடல்களுக்கு திபு நைனன் தாமஸ் இசையமைத்துள்ளார், விஷால் சந்திரசேகர் பின்னணி இசையமைத்துள்ளார், பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார், சுரேஷ்.ஏ.பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட இதன் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை வருகிற செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Read Today's Latest Focus Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Chandramukhi-2
  • #chithha
  • #iraivan
  • #september 28 theatrical release tamil movies list

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

OTT Movies : இந்த வாரம் OTT-யில் ரிலீஸாகியுள்ள தமிழ் படங்களின் லிஸ்ட்!

OTT Movies : இந்த வாரம் OTT-யில் ரிலீஸாகியுள்ள தமிழ் படங்களின் லிஸ்ட்!

ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’-க்காக ஸ்ருஷ்டி டாங்கே வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’-க்காக ஸ்ருஷ்டி டாங்கே வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

அடேங்கப்பா… 2 வாரத்தில் ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 2 வாரத்தில் ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’ செய்த வசூல் இத்தனை கோடியா?

ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’-க்காக மஹிமா நம்பியார் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’-க்காக மஹிமா நம்பியார் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’-க்காக கங்கனா ரனாவத் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’-க்காக கங்கனா ரனாவத் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

பி.வாசுவின் ‘சந்திரமுகி 2’ படத்துக்காக ராகவா லாரன்ஸ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

பி.வாசுவின் ‘சந்திரமுகி 2’ படத்துக்காக ராகவா லாரன்ஸ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version