ரஜினி – அமிதாப் பச்சன் இணைந்து நடிக்கும் ‘தலைவர் 170’… ஆரம்பமானது அடுத்த கட்ட படப்பிடிப்பு!
October 25, 2023 / 06:13 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இப்போது இவர் நடிப்பில் ‘லால் சலாம்’, இயக்குநர் த.செ.ஞானவேல் படம், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் ‘தலைவர் 170’ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார்.
ரஜினி போலீஸ் ரோலில் நடிக்கும் இந்த படத்துக்கு ‘வேட்டையன்’ என டைட்டில் வைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் முக்கிய ரோல்களில் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ஆகியோர் நடிக்கின்றனர்.
தற்போது, இப்படத்தின் புதிய ஷெட்யூல் ஷூட்டிங் இன்று முதல் மும்பையில் துவங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த ஷெட்யூலில் அமிதாப் பச்சன் – ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கத் திட்டமிட்டுள்ளனர். இத்தகவலை ரஜினியே ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுடன், அமிதாப்புடன் எடுத்துக்கொண்ட ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்லையும் ஷேர் செய்துள்ளார்.