தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் ‘புரட்சிக்கலைஞர்’ விஜயகாந்த். கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி வழக்கமான பரிசோதனைக்காக விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதன் பிறகு அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால், வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று (டிசம்பர் 28-ஆம் தேதி) காலை சிகிச்சை பலனின்றி நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் (வயது 71) காலமானார்.

தற்போது, விஜயகாந்தின் உடலுக்கு கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதாக தகவல் கிடைத்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் ஸ்டில்ஸ் வெளியாகி வைரலாகி வருகிறது.
