Saindhav : வெங்கடேஷின் ‘சைந்தவ்’… இத்தனை கோடி வசூலித்தால் தான் பிரேக் ஈவன் ஆகுமா?
January 10, 2024 / 03:29 PM IST
|Follow Us
தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் வெங்கடேஷ். இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய ஆக்ஷன் படம் ‘சைந்தவ்’. இந்த படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கோலானு இயக்கியுள்ளார்.
இதில் மிக முக்கிய ரோல்களில் ஆர்யா, நவாசுதீன் சித்திக், ஷ்ரதா ஸ்ரீநாத், ருஹானி ஷர்மா, ஆண்ட்ரியா மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
வெங்கடேஷின் 75-வது படமான இதனை ‘நிஹரிகா எண்டர்டெயின்மெண்ட்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில், வெளியிடப்பட்ட ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்தது. இப்படத்தை வருகிற ஜனவரி 13-ஆம் தேதி பொங்கல் (சங்கராந்தி) பண்டிகையை முன்னிட்டு தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். தற்போது, இந்த படம் உலக அளவில் ரூ.26 கோடி வசூலித்தால் தான் பிரேக் ஈவன் ஆகும் என்று தகவல் கிடைத்துள்ளது.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.