Blue Star : அசோக் செல்வன் – ஷாந்தனு இணைந்து நடித்துள்ள ‘ப்ளூ ஸ்டார்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!
January 25, 2024 / 07:30 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் பா.இரஞ்சித். இவர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘நீலம் புரொக்ஷன்ஸ்’ மூலம் தயாரித்துள்ள புதிய படம் ‘ப்ளூ ஸ்டார்’ (Blue Star). இப்படம் இன்று (ஜனவரி 25-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.
இந்த படத்தை எஸ்.ஜெயக்குமார் இயக்கியுள்ளார். இதில் அசோக் செல்வன் – ஷாந்தனு பாக்யராஜ் இணைந்து நடித்துள்ளனர். மேலும், மிக முக்கிய ரோல்களில் கீர்த்தி பாண்டியன், ப்ரித்விராஜன், பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், திவ்யா துரைசாமி ஆகியோர் நடித்துள்ளனர்.
இதற்கு கோவிந்த் வஸந்தா இசையமைத்துள்ளார், தமிழ்.ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார், செல்வா.ஆர்.கே. படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
#BlueStar is brilliant sports political movie. All round performance by @AshokSelvan . He has transformed completely. good performances by @imKBRshanthnu , prithvi and bhaks . dialogues, bgm, performances . Dont miss the movie this weekend.
#BlueStar First Half – Quite appealing. Kudos to Editor & DOP. So far, they prove to be showstoppers. It is evident that the second half will be more riveting as the interval point unravels the forthcoming challenge of protagonists. pic.twitter.com/0oHbtnDtbm
ஆதிக்கத்துக்கு எதிரானதொரு சம்மட்டி அடியாக இறங்கியிருக்கிறது படம். ரத்தமும் சதையுமான மாந்தர்களின் ஊடே வெளிச்சக்கீற்றாக, விளையாட்டை ஒரு புள்ளியில் இணைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு தருணமும் வாழ்வியலின் பேரன்பின் ஆதி ஊற்றாக உள்ளிறங்கியிருப்பது சிறப்பு.