கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள், சேவைகள் தவிர்த்து பிற சேவைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதால் அத்தியாவசிய தேவை தவிர பிற கடைகளும் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நேற்று முதல் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளதால், மதுபிரியர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இதை தொடர்ந்து மக்கள் அதிகம் கூடும் இடமான திரையரங்குகளும் திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது இருக்கும் சூழலில் திரையரங்குகள் திறந்தால் கொரோனா பரவ கூடும் என்பதால், ஜூன் மாதத்தில் திறக்கப்படும் என நம்ப தகுந்த வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.ஜூன் மாத்திலும் இதே நிலை நீடித்தால் திரையரங்கு திறப்பு தள்ளிபோகும் வாய்ப்பும் உள்ளது.