தமிழில் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் எது தெரியுமா?
August 26, 2020 / 08:05 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் முதல் பாகம் வெற்றியடைந்த பல திரைப்படங்களின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு, முதல் பாகம் அளவிற்கு அந்த படம் ஓடாமல் தோல்வியடைந்த படங்களின் லிஸ்ட் ஏராளம்.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் ஒரு படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் கலாச்சாரம் எந்த படத்திலிருந்து தொடங்கியது என்று பார்த்தால் அதற்கு நான் அவன் இல்லை திரைப்படம்தான் என்று பலரும் நினைத்து வருகிறார்கள்.
தற்போது புதிய தகவல் என்னவென்றால் 1982ஆம் வருடம் பிரேம் குமார் மற்றும் ராணி பத்மினி நடிப்பில் வெளியான படமான “குரோதம்” அப்போதைய ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட மிகப்பெரிய வெற்றியடைந்ததாம்.
இதனால் இந்த படத்தை 2000ஆம் வருடம் நடிகர் பிரேம் மற்றும் குஷ்பூ நடிப்பில் “குரோதம் 2” என்ற பெயரில் இரண்டாம் பாகம் உருவாக்கினார்களாம். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி அடையவில்லை.
இந்தப் படம் வெளியான சில நாட்கள் கழித்து தான் நான் அவன் இல்லை படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்களை தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளியான பில்லா, சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம், விஷால் நடிப்பில் வெளியான சண்டக்கோழி மற்றும் விக்ரம் நடிப்பில் வெளியான சாமி என பல வெற்றி திரைப்படங்களின் இரண்டாம் பாகம் உருவாகியது.
அதிக அளவில் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்ட படங்கள் தோல்வியடைந்தாலும், ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான முனி , சுந்தர்.சியின் அரண்மனை போன்ற படங்களின் இரண்டாம் பாகம் வெற்றியடைந்த கதைகளும் உண்டு.