• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » இந்தியன் 2 உட்பட 6 படங்களின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடக்கம்!

இந்தியன் 2 உட்பட 6 படங்களின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடக்கம்!

  • May 13, 2020 / 01:05 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
இந்தியன் 2 உட்பட 6 படங்களின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடக்கம்!

அரசு அறிவிப்பை அடுத்து, தமிழ்த் திரைப்படங்களின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் இன்று தொடங்கியுள்ளன.

லாக்டவுனுக்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து, கேரளாவில், சினிமா போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை ஆரம்பிக்கலாம் என்று அம்மாநில அரசு அனுமதி அளித்தது.இதே போல, தமிழ் சினிமாவிலும் அனுமதிக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் திரைப்படத் தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்தனர்.

அப்போது ‘ 50 நாட்களுக்கு மேலாக திரைப்பட துறை சம்பந்தப்பட்ட எந்த வேலைகளும் நடக்கவில்லை. 50 படங்களுக்கு மேல் தடைபட்டு, ஏறக்குறைய 500 கோடி ரூபாய் முதலீடு முடங்கியுள்ளது. தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. படப்பிடிப்புக்கு அனுமதி கொடுக்க முடியாவிட்டாலும், போஸ்ட்-புரொடக்சன் பணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்’ என்று பெப்சியும் தயாரிப்பாளர்களும் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து தமிழக அரசு, 11ஆம் தேதி முதல், போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை தொடங்க அனுமதி அளித்தது . இதுபற்றி அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களும் சின்னத்திரை தயாரிப்பாளர்களும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை செய்வதற்காக மட்டும் அனுமதி அளிக்க கோரிக்கை வைத்திருந்தனர்.

அதை பரிசீலித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 11 ஆம் தேதி முதல் அந்தப் பணிகளை மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளார். அதன்படி, படத்தொகுப்பு (5 பேர்), கிராபிக்ஸ் (10 முதல் 15 பேர்) டப்பிங் (5 பேர்), டி.ஐ (5 பேர்), பின்னணி இசை (5 பேர்), சவுண்ட் மிக்சிங் ( 5 பேர்) ஆகிய பணிகளை மேற்கொள்ளலாம்.

சமூக இடைவெளியுடனும் முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி உபயோகித்தும் மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாடுகளை பின்பற்றியும் பணி செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் சென்னையில் இன்று தொடங்கியுள்ளன.

இதுபற்றி பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் கேட்டபோது, இதை உறுதி செய்தார். அவர் கூறும்போது, ‘அரசு அறிவித்ததை அடுத்து, ஆறு படங்களின் டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் 3 சின்னத்திரை தொடர்களின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளும் இன்று தொடங்கியுள்ளன’ என்று தெரிவித்தார்.

இதுபற்றி விசாரித்தபோது, ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2, விஷால் நடித்துள்ள சக்ரா, த்ரிஷா நடிக்கும் ராங்கி ஆகிய படங்களின் எடிட்டிங், கபடதாரி, யோகிபாபு நடித்துள்ள காவி ஆவி நடுவுல தேவி ஆகிய படங்களின் டப்பிங் உட்பட 6 படங்களின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் இன்று தொடங்கி இருப்பது தெரிய வந்தது

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Bobby Simha
  • #Indian 2 Movie
  • #Kajal
  • #Kajal Aggarwal
  • #Kamal Haasan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Rakul Preet Singh & Jackky Bhagnani : நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் கணவரும், நடிகருமான ஜாக்கி பக்னானியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Rakul Preet Singh & Jackky Bhagnani : நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் கணவரும், நடிகருமான ஜாக்கி பக்னானியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Kamal Haasan & Bigg Boss Tamil : ‘பிக் பாஸ்’ சீசன் 1 முதல் 7 வரை நடிகர் கமல் ஹாசன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Kamal Haasan & Bigg Boss Tamil : ‘பிக் பாஸ்’ சீசன் 1 முதல் 7 வரை நடிகர் கமல் ஹாசன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Kalki 2898 AD : பிரபாஸ் – கமல்ஹாசன் நடிக்கும் ‘கல்கி 2898 AD’… டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Kalki 2898 AD : பிரபாஸ் – கமல்ஹாசன் நடிக்கும் ‘கல்கி 2898 AD’… டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Indian 2 :  கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன் 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Indian 2 : கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன் 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version