லாக்டவுனில் வீட்டில் இருக்கும் மகேஷ் பாபுவின் புது லுக் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து பேசுபொருளாக மாறியுள்ளது.
மகேஷ் பாபு தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். வசூல் ரீதியாக இவரின் படங்கள் பாக்ஸ் ஆபீஸில் பெரிய வெற்றிகளைப் பெற்று வருகிறது. தற்போது லாக்டவுன் நீடித்து வருவதால், திரை பிரபலங்கள் தங்கள் வீட்டில் எவ்வாறு நேரத்தைகழித்து வருகிறார்கள் என்பதை சமூகவலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர்.
சிலர் வீட்டில் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில், நடிகர் மகேஷ் பாபு வீட்டில் தன் மனைவி குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். மகேஷ் பாபுவின் புகைப்படங்களை அவரது மனைவி நம்ரதா ஷிரோத்கர் அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துவருகிறார்.
அண்மையில் நம்ரதா இன்ஸ்டாவில் பதிவிட்ட, மகேஷ் பாபுவின் புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது. மகேஷ் பாபு க்ளீன் ஷேவ் லுக்கில் அந்தப் புகைப்படத்தில் இருப்பதுதான் பேசு பொருளாகியிருப்பதற்கு காரணமாம். இந்த கிளீன் ஷேவ் புகைப்படம் தான் இப்போது ட்ரெண்டாகி வருகிறது. பலரும் இந்த புதிய லுக்கை புகழ்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும், ‘கீதா கோவிந்தம்’ திரைப்படத்தின் இயக்குநர் பரசுராமுடன் மகேஷ் பாபு இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.