பிரபல திரைப்பட நடிகையான ஸ்ருதிஹாசன் நேரலையில் ரசிகர்களோடு தனது திரையுலக அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். இதில் தன் ரசிகர்கள் கேள்விகள் கேட்க அதற்கு பதில் அளித்துள்ளார்.
உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் மகள் ஸ்ருதிஹாசன் தன்னுடன் நடித்த நடிகர்கள் பற்றி கூறியுள்ளார். வேதாளம் படத்தில் தனக்கு கிடைத்த அனுபவம் பற்றி அவர் பேசிய பொழுது , நடிகர் அஜித் நல்ல மனிதர் என்றும் அவருடன் பணிபுரிந்தது தனக்கு சிறந்த அனுபவத்தை தந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் நடிகர் விஜய் பற்றி கூறியபோது, தளபதி விஜய்யுடன் பணிபுரிந்தது தனக்கு புதிய மற்றும் நல்ல அனுபவத்தை தந்தது என்று கூறினார்.
மேலும் இவர் தெலுங்கு நடிகரான மகேஷ் பாபு ,சியான் விக்ரம் ,ரவிதேஜா ஆகியோருடன் தனக்கு கிடைத்த திரைப்பட அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
தன் தந்தை கமலுடன் தனக்கு இருந்த சிறு வயது அனுபவம் பற்றி பகிர்ந்த போது அவர் கூறியதாவது” என் தந்தையுடன் ரோலர் ஸ்கேட்டிங் கற்றுக்கொண்டதும், தேவர்மகன் படப்பிடிப்பின்போது என் தந்தை சிலம்பம் கற்றுக் கொண்டார், அவரோடு சேர்ந்து நானும் சில நேரம் சிலம்பம் கற்றுக் கொண்டேன் ,இவை எனக்கு அவரோடு மறக்க முடியாத நினைவுகள்” என்று கூறியுள்ளார்
மேலும் அவர் தன் ரசிகர்களுக்காக தான் நடித்து வெளியான ‘3 ‘படத்தில் உள்ள ‘கண்ணழகா’ என்ற பாடலை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பாடினார்.