பாலிவுட் லைப்பில் நடந்த ஒரு நேர்காணலில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட2 படம் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
தமிழில் “பீசா” படம் மூலம் அறிமுகமாகி சூதுகவ்வும், ஜிகர்தண்டா, இறைவி ஆகிய படங்களின் மூலம் தன் தனித்துவத்தால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து “பேட்ட” படத்தை சென்றவருடம் இயக்கியிருந்தார், இந்த படம் சூப்பர் ஹிட்டானது.
இதைத்தொடர்ந்து தனுஷை வைத்து “ஜகமே தந்திரம்” படத்தை இயக்கியிருந்தார்.கொரோனா லாக்டவுனிற்கு பிறகு இந்த படம் வெளியிடப்படும் என்ற செய்தி வந்துள்ளது.
இதை தொடர்ந்து இவர் நடிகர் விக்ரம் வைத்து “சியான்60″ படத்தை இயக்கவிருக்கிறார். சமீபத்தில் நடந்த நேர்காணலில் பேட்ட- 2 படம் பற்றி கேட்டபோது” பேட்ட படம் எடுத்துக் கொண்டிருந்தபோது இந்த படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய எந்த சிந்தனையும் இருக்கவில்லை. ஆனால் ரசிகர்கள் இதைப் பற்றி இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்,மேலும் இந்த கதைக்கரு இப்படி இருக்குமோ என்று சில கதைகளையும் கூறி வருகிறார்கள். நான் பேட்டை 2 படத்திற்கான கதையை இன்னும் தயார் செய்யவில்லை, இருப்பினும் பேட்டை 2 படம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்”என்று கூறியிருக்கிறார்.
2019 ஆம் ஆண்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படம் ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்தது. இதைத்தொடர்ந்து அவரது ரசிகர்கள் தற்போது பேட்ட2 படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.