சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் வசித்து வருகிறார். இதையடுத்து நேற்று இவரது வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக ஒரு மிரட்டல் போன் கால் வந்தது.
இதையடுத்து தேனாம்பேட்டை போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் இவரது வீட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பல மணி நேர சோதனைக்குப் பிறகு வெடிகுண்டு ஏதும் தென்படாததால் இது வெறும் புரளி என்று போலீசார் தெரிவித்துவிட்டு வந்தனர்.
ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார் என்று தீவிர தேடலில் போலீசார் ஈடுபட்டனர். இதில் அவர்கள் கண்டுபிடித்ததாவது ரஜினி வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தவர் கடலூரைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஆவான். மேலும் அந்தச் சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவன் என்பதும் முதல்கட்ட விசாரணையில் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.