இந்த வருடம் சர்வதேச யோகா தினம் ஜூன் 21ஆம் தேதி. தற்போதுள்ள சூழ்நிலையில் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள அனைவருமே யோகா பயிற்சி செய்ய தொடங்கிவிட்டார்கள். இதில் முக்கிய பங்கு சினிமா பிரபலங்களுக்கு உண்டு. தென்னிந்தியா மற்றும் பாலிவுட் நடிகர் நடிகைகள் தங்களது அன்றாட பழக்கவழக்கங்களில் யோகா செய்வதையும் பின்பற்றி வருகிறார்கள்.
1. தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால் பல வருடங்களாகவே யோகா செய்து வருகிறார். சிறுவயதில் எந்த விளையாட்டிலும் ஈடுபாடு இல்லாத காஜல், தனது கல்லூரி பருவத்தில் உடல் ஆரோக்கியத்திற்கான முக்கியத்துவம் அறிந்து யோகா செய்யத் தொடங்கியுள்ளார். யோகா செய்வதன் மூலம் உடல் எடையை குறைப்பது மட்டுமல்லாமல் மன ஆரோக்கியத்தையும் பாதுகாக்க முடிகிறது என்று அவர் கூறியுள்ளார். அவர் யோகா செய்யும் அசத்தல் போட்டோஸ் இதோ!
2. இவரை தொடர்ந்து, நடிகை ராசி கண்ணா தனது 16 வயதில் இருந்தே யோகா செய்து வருகிறாராம். இவர் யோகா செய்வதன் மூலம் அவர் எடையை குறைத்தது மட்டுமல்லாமல், எவ்வளவு நேரம் வேலை செய்தாலும் யோகா செய்வதினால் களைப்பு தெரிவதில்லை என்றும் கூறியிருக்கிறார்.
View this post on Instagram
#workoutfromhome #rashikanna_official @raashikhannaoffl
A post shared by Raashikanna🔵 (@rashikanna_official) on
3. இவரை தொடர்ந்து தென்னிந்தியாவில் மற்றொரு முன்னணி நடிகையான ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராம் பக்கங்களை திறந்தாலே யோகா செய்வது உடற்பயிற்சி செய்வது போன்ற புகைப்படங்களை காணலாம். அவ்வளவு கவனம் அவருக்கு ஆரோக்கியத்தின் மீது! இதோ அவரின் கலக்கல் யோகா போஸ்!
4.நடிகை ஆதா ஷர்மாவும் இதில் குறிப்பிடத்தக்கவர். இவர் தனது தாய் ஷீலா சர்மாவிடம் இருந்து யோகா கற்றுக் கொண்டாராம். மேலும் சூரிய நமஸ்கார் யோகா போஸ் தான் தனக்கு மிகவும் விருப்பமான ஒன்று என்று கூறியுள்ளார்.
5. இவர்களைப் போலவே நடிகை அமலாபால் யோகா செய்வதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார்.
6. தற்போது இணையதளத்தில் அதிகமாக வைரலாகும் நடிகை ஆத்மிகாவும் யோகா பயிற்சி செய்து தன் அழகை பராமரிக்கிறாராம்.
இவர்கள் மட்டுமின்றி பல பாலிவுட் நடிகர் நடிகைகளும் தீவிரமான யோகா பயிற்சியில் அன்றாடம் ஈடுபட்டு வருகிறார்களாம்.