1.கார்த்திக் சுப்புராஜ் : 2012 ஆம் ஆண்டு வெளியான “பீட்சா”திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இது ஒரு ஹாரர் படம். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தை சி.வி.குமார் தயாரித்து வெளியிட்டார். புதுமுக இயக்குனரின் படம் அவ்வளவு வெகுவாக ரசிகர்களை கவர்ந்தது என்றால் அது கார்த்திக் சுப்பராஜ் படம்தான்.
2. லோகேஷ் கனகராஜ் : 2017 ஆம் ஆண்டு வெளிவந்த “மாநகரம்”திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் லோகேஷ் கனகராஜ். எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் வெளிவந்த இந்தப் படம் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் ஆகும். இந்தப்படத்தில் சுந்தீப்கிஷன் மற்றும் ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் நடித்திருந்தார்கள்.இந்தப் படம் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்த பின் இதை தொடர்ந்து அவர் இயக்கிய படம்தான் “கைதி”.
3. நலன் குமாரசாமி: 2013-ம் ஆண்டு வெளிவந்த “சூது கவ்வும்” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்தப்பட்டவர் நலன் குமாரசாமி. இது கிரைம் காமெடி படமாகும். விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், கருணாகரன், சஞ்சிதா ஷெட்டி என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தார்கள். இந்தப்படம் காமெடிக்காக மக்களிடையே பெரிதாக பேசப்பட்டது. இந்தப் படமும் சிவி குமார் தயாரித்து வெளியிட்டார்.
4. நவீன் : 2013ம் ஆண்டு வெளியான பிளாக் காமெடி திரைப்படம் “மூடர் கூடம்”. இதில் அறிமுக இயக்குனராக வந்த நவீன் இந்த படத்தை எழுதி, தயாரித்து, நடித்து, இயக்கி வெளியிட்டார். மக்களிடையே இது நகைச்சுவை காட்சிகளுக்காக பெரிதாகப் பேசப்பட்ட படம்.
5. கார்த்திக் நரேன் : 2011 ம் ஆண்டு வெளிவந்த “துருவங்கள் 16” படத்தின் மூலம் அறிமுக இயக்குனராக வந்தவர் கார்த்திக் நரேன். இந்தப் படத்தில் ரகுமான், பிரகாஷ் விஜயராகவன், அஸ்வின் குமார் ஆகியோர் நடித்திருந்தனர். இதன் மாறுபட்ட கதைகளத்திற்காக பேசப்பட்ட இந்த படத்தை நரேன் தயாரித்து வெளியிட்டார்.
6. பா ரஞ்சித் : 2012 ஆம் ஆண்டு வெளிவந்து பட்டிதொட்டியெல்லாம் பேசப்பட்ட படம் “அட்டக்கத்தி”. இந்த படத்தில் தினேஷ், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் ஒரு மாறுபட்ட காதல் காவியமாக அமைந்தது. இந்தப் படத்தையும் சிவி குமார் தயாரித்து வெளியிட்டார். இதை தொடர்ந்து இவர் கொடுத்த வெற்றிப்படம்தான் “மெட்ராஸ்”.
7. எச்.வினோத் : 2014ஆம் ஆண்டு வெளிவந்து விறுவிறுப்பான கதைகரு கொண்ட படம் என்று பேசப்பட்டது “சதுரங்கவேட்டை” திரைப்படம். இந்த படத்தை அறிமுக இயக்குனர் எச்.வினோத் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் நட்டி என்ற நடராஜ் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து வினோத் இயக்கி வெற்றி வாகை சூடிய படம் “தீரன் அதிகாரம் ஒன்று”.
8. விஜய் குமார் : 2016 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “உரியடி”. இந்த படம் ஒரு பொலிட்டிக்கல் ஆக்ஷன் திரில்லர் படம். மாறுபட்ட கதை களம் கொண்ட இந்த படத்தை அறிமுக இயக்குனர் விஜயகுமார் இயக்கியிருந்தார். மேலும் இந்த படத்தை அவரே தயாரித்து வெளியிட்டார்.
9. சுசீந்திரன் : 2009 ஆம் ஆண்டு வெளிவந்த “வெண்ணிலா கபடி குழு” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் இயக்குனர் சுசீந்திரன். இந்த படத்தில் விஷ்ணு விஷால், கிஷோர், சரண்யா மோகன் ஆகியோர் நடித்திருந்தார்கள். இமேஜின் கிரியேஷன்ஸ் இந்த படத்தை தயாரித்திருந்தார்கள். இந்தப் படம் மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.
10. தேசிங்கு பெரியசாமி : இந்த வருடம் வெளியான ரொமான்டிக் ஹேய்ஸ்ட் காமெடி திரைப்படம் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்”. இந்த படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் தேசிங்கு பெரியசாமி. இந்தப் படம் அதன் மாறுபட்ட கதைக்காக மக்களிடையே பெரிதும் பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தில் துல்கர் சல்மான் மற்றும் ரிது வர்மா ஆகியோர் நடித்திருந்தார்கள்.