நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவமாடி வருகிறது. பல மக்களுக்கு கொரோனா பாதிப்பு வந்த வண்ணம் உள்ளது. பல உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த “லிங்கா” படத்தை தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களை தயாரித்துள்ளார். இவர் முன்னணி நடிகர்களான ரஜினி, விக்ரம், சிம்பு ஆகியோரை வைத்து படம் தயாரித்துள்ளார்.இவர் தயாரிப்பாளர் மட்டுமல்லாது நடிகராகவும் திரையுலகில் வலம் வந்தவர்.
தற்போது அவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவரது கொரோனா பரிசோதனை முடிவுகள் முழுமையாக வெளிவராத நிலையில் அவரது அடுத்த கட்ட ட்ரீட்மென்ட் என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை என்று கூறி இருக்கிறார்கள்.
இவர் சமீபத்தில் நடிகை மற்றும் அரசியல்வாதி சுமலதா அம்பரீஷை சந்தித்ததாகவும் அவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு இருப்பதால் இவருக்கும் கண்டிப்பாக கொரோனா இருக்கக்கூடும் என்று செய்தி வெளியாகி உள்ளது.
இவர் தற்போது பெங்களூருவில் தனி சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா பாதிப்பு உறுதியானால் தகுந்த சிகிச்சை அவருக்கு அளிக்கப்படும் என்று செய்தி வெளியாகியுள்ளது.