உலக நாயகன் கமல்ஹாசன் என்றால் வித்யாசமான படைப்பை தருபவர் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம். 1960 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக “களத்தூர் கண்ணம்மா” படத்தில் தன் நடிப்பு பயணத்தை தொடங்கிய இவர், நடித்த அனைத்து படங்களுமே தனித்துவம் வாய்ந்தவை.
தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், படங்களை ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கு அனைத்து தயாரிப்பாளர்களும் முட்டி மோதிக் கொள்கிறார்கள்.
ஆனால் “விஸ்வரூபம்” படம் உருவான போதே அந்த படத்தை DTHல் வெளியிடுவதற்கு கமல் முயற்சி செய்தார். அப்போது அதற்கு அனைத்து தயாரிப்பாளர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
எப்பொழுதுமே சினிமாவில் ஒரு படி முன்னே இருக்கும் கமலின் திறமை, இதிலேயே நாம் கண்டுகொள்ளலாம். தற்போது செய்தி என்னவென்றால் கமல் OTT தளத்தில் வெளியிடுவதற்காகவே ஒரு கதையை எழுதி வருவதாகவும் இந்தக் கதையில் குறைந்த அளவு நடிகர்களும் திரைப்படக்குழுவுமே பங்கேற்று ஒரு ப்ராஜக்டை உருவாக்கவுள்ளதாகவும் செய்தி வந்துள்ளது.
இந்த படத்தில் கமல் நடிப்பாரா இல்லை தயாரிப்பாளரா என்பது குறித்து செய்தி எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளிவராத நிலையில், அவரது ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.
அதுமட்டுமின்றி கமல் “தலைவர் 169” என்ற சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை தயாரிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கபோகிறார் என்ற செய்தியும் சமீபத்தில் வெளியானது. ஆனால் இந்தப் படத்தில் கமல் நடிக்கிறாரா என்பது பற்றி முழுமையான தகவல் எதுவும் வெளிவரவில்லை.
கமல் தற்போது சங்கர் இயக்கத்தில் “இந்தியன் 2” படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி ஏ.ஆர்.ரகுமான் இசையில் “தலைவன் இருக்கின்றான்” படத்திலும் விரைவில் கமல் பங்கேற்கவுள்ளார்.